ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 44 சிறப்பு ரயில்கள், பஸ்கள் இயக்கம்
ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக்காக 44 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டள்ளது. "தீபாவளியை முன்னிட்டு, சென்னையிலிருந்து மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை, மங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு உள்ளிட்ட இடங்களுக்கு தேவைக்கேற்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும், பிற சிறப்பு ரயில்கள் விரைவில் இயக்கப்படும்," என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அடுத்த 11ஆம் தேதி ஆயுத பூஜை மற்றும் 12ஆம் தேதி விஜயதசமி கொண்டாடப்படவுள்ள நிலையில், இன்றும் நாளையும் அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
பேருந்து முன்பதிவு விவரங்கள்
இன்று 700, நாளை 2,000 பஸ்கள் சென்னையில் இருந்து இயக்கப்படுவதாகவும், முக்கிய நகரங்களில் இருந்து பிற இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாகவும் தகவல் உள்ளது. இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது, "அரசு பஸ்களில் பயணிக்க 25,000 பேர் என மொத்தம் 45,000க்கும் தமிழகத்தில் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்" என தெரிவித்தனர். மேலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் வழக்கமான விரைவு ரயில்களில் முன்பதிவு முடிந்து விட்டதால், ஆம்னி பஸ்களில் வழக்கத்தை விட 40 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என புகார் எழுந்துள்ளது.