Page Loader
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: விவரங்கள்
தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: விவரங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 06, 2025
04:13 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் வரும் 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதன் போது, பொது மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லுவதற்கு வசதியாக தமிழக போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அதன்படி வரும் ஜனவரி 10, 11, 12 மற்றும் 13 தேதிகளில் பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் சென்னையில், கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய மூன்று பேருந்து நிலையங்களிலிருந்து தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.

embed

Twitter Post

#WATCH | பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் எங்கிருந்து இயக்கம்? - அரசின் ஏற்பாடுகள் குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி #SunNews | #Pongal2025 | #SpecialBuses pic.twitter.com/aECxkcTTTS— Sun News (@sunnewstamil) January 6, 2025

விவரங்கள்

சிறப்பு பேருந்துகள் இயக்கம் மற்றும் விவரங்கள்

பொங்கல் பண்டிகைக்காக 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதாவது வழக்கமாக இயக்கப்படும் 8,368 பேருந்துகளுடன் கூடுதலாக 5,736 பேருந்துகள் இயக்கப்படுமாம். கோயம்பேட்டிலிருந்து இசிஆர் மார்க்கம், காஞ்சிபுரம், வேலூர் திருத்தணி ஆகிய இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மாதவரத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை மற்றும் ஆந்திரா மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகளுடன், திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை செல்லும் சில குறிப்பிட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மற்ற அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.