Page Loader
பயணிகளின் கவனத்திற்கு, பொங்கல் பண்டிகையை ஒட்டி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

பயணிகளின் கவனத்திற்கு, பொங்கல் பண்டிகையை ஒட்டி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Jan 03, 2025
05:44 pm

செய்தி முன்னோட்டம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில், தமிழக மக்கள் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர். பலர் வேலைக்காக சொந்த ஊரை விட்டு சென்னையும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் வசித்து வருகின்றனர். அவர்கள் பண்டிகையை கொண்டாட ஊர் திரும்ப வசதியாக தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விவரங்கள்

சிறப்பு ரயிலின் விவரங்கள்

ஜனவரி 4, 5, 10, 11, 12, 13, 17, 18, 19 ஆம் தேதிகளில், தாம்பரத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு ஜன் சதாப்தி சிறப்பு அதி விரைவு ரயில் இயக்கப்படவுள்ளது. அதேபோல், திருச்சி இருந்து மாலை 5.35 மணிக்கு திரும்பவும் சிறப்பு ரயில் தாம்பரத்திற்கு இயக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு ரயிலின் எண் 06190/06191 ஆகும், இது திருச்சிராப்பள்ளி, தாம்பரம் மார்கமாகவும், மருமார்கத்தில் திருச்சிராப்பள்ளியில் இருந்தும் புறப்பட்டு, தாம்பரம் வந்தடையும். ரயில் திருச்சியில் இருந்து 5.35 மணிக்கு புறப்பட்டு, தாம்பரத்திற்கு 12.30 மணிக்கு சென்று அடையும். அதேபோல், தாம்பரத்திலிருந்து காலை 11.35 மணிக்கு புறப்பட்டு, 3.30 மணிக்கு திருச்சி செல்லும்.

embed

Twitter Post

#தகவல்பலகை | பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி, தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே#SunNews | #SpecialTrain | #Tambaram pic.twitter.com/dsevt42uQf— Sun News (@sunnewstamil) January 3, 2025