Page Loader
தமிழகத்தில் ஆறு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தலைமை செயலாளர் அறிக்கை 
தமிழகத்தில் ஆறு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

தமிழகத்தில் ஆறு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தலைமை செயலாளர் அறிக்கை 

எழுதியவர் Venkatalakshmi V
Nov 17, 2023
08:52 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் ஆறு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, நேற்று மாலை அரசு சார்பில் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும தலைமை நிர்வாக அதிகாரியாக காயத்ரி கிருஷ்ணனும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண் இயக்குநராக விஜய கார்த்திகேயனும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநராக ஸ்ரேயா பி.சிங்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையராக ஜெயகாந்தனும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை துணை செயலாளராக பிரதாப்பும், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை இணை செயலாளராக ரத்னாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்