Page Loader
சென்னை மாநகர பேருந்துகளில் இன்று முதல் வரும் சூப்பர் மாற்றம்: ஸ்மார்ட் அட்டை மூலம் எளிதாகும் பயணம்
சென்னை மாநகர பேருந்துகளில் இன்று முதல் வரும் சூப்பர் மாற்றம்

சென்னை மாநகர பேருந்துகளில் இன்று முதல் வரும் சூப்பர் மாற்றம்: ஸ்மார்ட் அட்டை மூலம் எளிதாகும் பயணம்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 06, 2025
08:52 am

செய்தி முன்னோட்டம்

சென்னை மாநகர பேருந்துகளில் இன்று முதல் ஸ்மார்ட் அட்டை திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சென்னையில் மக்கள் தற்போது பயன்படுத்தும் பொது போக்குவரத்து சேவைகளாக மின்சார ரயில், மாநகர பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் ஆகியவை உள்ளன. அந்த வகையில், பயணிகள் வசதிகளை மேம்படுத்துவதற்காக, இந்த மூன்று போக்குவரத்து சேவைகளுக்கும் ஒரே பயணச்சீட்டை பயன்படுத்தும் முறையை அறிமுகப்படுத்தவிருப்பதாக ஏற்கனவே தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. தற்போது, "சிங்கார சென்னை" ஸ்மார்ட் அட்டை மெட்ரோ ரயிலில் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஸ்மார்ட் அட்டையை மாநகரப் பேருந்துகளுக்கும் பரவலாக்கும் திட்டத்தை தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி வைக்கிறார்.

embed

Twitter Post

#தகவல்பலகை | சென்னை மாநகர பேருந்துகளில் சிங்காரச் சென்னை ஸ்மார்ட் அட்டை திட்டம் நாளை அறிமுகம்!#SunNews | #SingaraChennaiSmartCard | #Chennai | #PublicTrasport pic.twitter.com/dSxjmqjxRl— Sun News (@sunnewstamil) January 5, 2025

செயல்பாடு

ஸ்மார்ட் கார்ட் எப்படி பயன்படுத்துவது? எங்கே பெறுவது?

"சிங்கார சென்னை" ஸ்மார்ட் அட்டையை மெட்ரோ நிலையத்தில் வழக்கம் போல ஸ்கேன் செய்து பயணிக்க முடியும். அதேபோல், தற்போது அரசு பேருந்துகளிலும், கண்டக்டரிடம் வழங்கப்பட்ட ஸ்கேன் கருவிகளின் மூலம் இந்த அட்டையை ஸ்கேன் செய்து பயணிக்கலாம். முதல் கட்டமாக, 50,000 ஸ்மார்ட் அட்டைகள் ஸ்டேட் பேங்க் மூலம் கட்டணம் இன்றி வழங்கப்படும். இவை இன்று முதல் கோயம்பேடு மற்றும் பிராட்வே பேருந்து நிலையங்களில் வினியோகம் செய்யப்படுகின்றன.