Page Loader
தங்க கடத்தல் வழக்கில் காங்கிரஸ் தலைவர் சசி தரூரின் உதவியாளர் டெல்லியில் கைது 
தங்க கடத்தல் தொடர்பான வழக்கில் டெல்லி சுங்கத்துறை அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்

தங்க கடத்தல் வழக்கில் காங்கிரஸ் தலைவர் சசி தரூரின் உதவியாளர் டெல்லியில் கைது 

எழுதியவர் Venkatalakshmi V
May 30, 2024
10:10 am

செய்தி முன்னோட்டம்

காங்கிரஸ் தலைவர் சசி தரூரின் தனி உதவியாளர் சிவகுமார் பிரசாத், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். சுமார் 500 கிராம் தங்க கடத்தல் தொடர்பான வழக்கில் டெல்லி சுங்கத்துறை அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார். துபாயில் இருந்து பயணி ஒருவரை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு வந்திருந்த பிரசாத், தங்கம் அடங்கிய பொட்டலத்தை பெற முயன்ற போது கைது செய்யப்பட்டார். சஷி தரூரின் உதவியாளர் காவலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் சிபிஐ (எம்) மீது பாஜக கடுமையாக விமர்சனங்களை தெரிவித்து வருகிறது.

அணுகல்

விமான நிலைய வளாகத்தை அணுகுவது, கைது செய்ய வசதியாக இருந்தது

பிரசாத்தின் ஏரோட்ரோம் நுழைவு அனுமதி அட்டை, அவருக்கு விமான நிலைய வளாகத்திற்குள் நுழைய அனுமதி அளித்தது. அதுவே அவரைக் கைது செய்ய உதவியது என்கிறார்கள் அதிகாரிகள். விமான நிலையத்திற்குள் ஒரு பாக்கெட்டைப் பெற்றுக்கொண்ட போது அவர் கைது செய்யப்பட்டார். "பிரசாத்திடம் ஏரோட்ரோம் நுழைவு அனுமதி அட்டை உள்ளது, அது அவரை விமான நிலைய வளாகத்திற்கு அணுக அனுமதிக்கிறது. அவர் விமான நிலைய வளாகத்திற்குள் நுழைந்தார், அதனால் பயணியிடம் அவர் பாக்கெட்டை பெற்ற போதே இருவரையும் கைது செய்யமுடிந்தது." என்று ANI செய்திகள் தெரிவித்தன. சம்பந்தப்பட்ட இருவரின் சான்றிதழ்களையும் சரிபார்த்த அதிகாரிகள் தற்போது வழக்கு விசாரணையில் உள்ளனர்.