ஆன்லைன் முன்பதிவில் புதிய சாதனை படைத்த SETC: ஒரே நாளில் 35 ஆயிரத்திற்கும் மேலானோர் முன்பதிவு
தமிழ்நாட்டில் பெரும்பாலும் கடைசி நேர பயணத்திற்கு போக்குவரத்து மார்கமாக ரயில்கள் விட பேருந்துகளையே தேர்வு செய்கிறார்கள் பொதுமக்கள். அதனால் பொதுமக்களின் சௌகரியத்திற்காக பண்டிகை நாட்கள், முகூர்த்த நாட்கள், தொடர் விடுமுறை நாட்களின் போதெல்லாம் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுவது வழக்கம். அதோடு தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் (TNSTC) இணையதளம் வழியாகவும் முன்பதிவு செய்ய வழிவகை செய்துள்ளது. இந்த நிலையில், கடந்த 4ஆம் தேதி மட்டும், 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்ததனர் எனவும், இது தமிழக அரசுப்போக்குவரத்து கழகம் முன்பதிவில் புது வரலாறு எனவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 2018ஆம் ஆண்டு, ஜனவரி 12ம் தேதி 32,910 பயணிகள் முன்பதிவு செய்ததே சாதனையாக இருந்தது