
லைக்ஸ் பாலோவர்ஸ்களை அதிகரிக்க செய்வதாக நூதன மோசடி - சைபர் கிரைம் எச்சரிக்கை!
செய்தி முன்னோட்டம்
இன்றைய நவீன காலக்கட்டத்தில் நூதன ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்துவிட்டன.
அந்த வகையில் லைக்ஸ் மற்றும் புளூ டிக் பெற விரும்பினால் பணம் செலுத்தி பாலோவர்ஸ் எண்ணிக்கை அதிகரிக்கும் என வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தியை அனுப்பி மோசடியில் இறங்கியுள்ளனர்.
அதன்படி, நூதன மோசடி செய்பவர்கள் லைக்ஸ் மற்றும் பாலோவர்களை அதிகரிக்க வேண்டுமா? சிறிய தொகை செலுத்தினால், நாங்கள் செய்து தருகிறோம் என ஒரு தொழிலாகவே செய்து வருகின்றனர்.
மேலும், இன்ஸ்டாகிராமில் ஆயிரம் பாலோவர்ஸ்களுக்கு 200 ரூபாய் எனவும், அதுவே 500 பேருக்கு 110 ரூபாய் எனவும், பணம் செலுத்த கூகுள் பே, போன்பே போன்றவைகளையும் அனுப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நூதன மோசடியை நம்பி ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
லைக் குவிய பணம் செலுத்துங்க: இப்படியும் நடக்குது நூதன மோசடி! #onlinescams #socialmediascams #சமூகவலைதளம் https://t.co/ykxpnigBLs
— Dinamalar (@dinamalarweb) May 2, 2023