
திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தென்மாவட்டங்களான திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று(அக்டோபர்-16) விடுமுறை என அம்மாவட்டங்களின் கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.
இதே போல, சென்னையின் பல இடங்களிலும் இன்றும் பரவலாக லேசான மழை பொழிந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தலைநகர் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
#BREAKING | மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை | School | Leave#school | #leaves | #tamilnadu | #rain | #thanthitv pic.twitter.com/CyszhFu6Xh
— Thanthi TV (@ThanthiTV) October 16, 2023