
கனமழை காரணமாக நீலகிரி, வால்பாறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
செய்தி முன்னோட்டம்
கடந்த நாட்களாக கேரளா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த காரணத்தால், கடும் மழை பெய்து வருகிறது.
அதன் எதிரொலியாக, கேரளா எல்லையிலுள்ள கோவை, நீலகிரி மற்றும் வால்பாறை மாவட்டங்களிலும் அதிக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3-ஆம் தேதி தொடங்கிய மழை, நேற்று மீண்டும் தீவிரமடைந்ததை தொடர்ந்து, இன்று (ஜூலை 6.,)நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர்.
அதேபோல, வால்பாறை பகுதியிலும் கனமழை பெய்து வருவதால், அங்கிருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளார், வால்பாறை ஆட்சியர் க்ரந்திகுமார் பாடி.
மறுபுறம், கேரளா மாநிலத்தில் கனமழை காரணமாக 11 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
கேரளாவில் விடுமுறை
#JUSTIN | கேரளாவில் கனமழை காரணமாக 11 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை#SunNews | #KeralaRains | #WeatherUpdate pic.twitter.com/62D0sYzxqL
— Sun News (@sunnewstamil) July 6, 2023
ட்விட்டர் அஞ்சல்
நீலகிரியில் விடுமுறை
#SunNews | நீலகிரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!#SunNews | #Nilgiris | #SchoolLeave | #Rain pic.twitter.com/QooNdYIunk
— Sun News (@sunnewstamil) July 6, 2023