உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 16) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்!
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை வியாழக்கிழமை (செப்டம்பர் 16) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கோயம்புத்தூர் மாவட்டம்:
காளப்பட்டி, சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா, வள்ளியம்பாளையம், கே.ஆர்.பாளையம், விளாங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை பகுதி, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர், லட்சுமி நகர், முருகன் நகர், குமுதம் நகர், ஜீவா நகர், செங்காளியப்பன் நகர், ஆங்கலக்குறிச்சி, ஆனைமலை, வி.கே.புதூர், ஒடியகுளம், ஆர்.சி.புரம், குளவன்புதூர், பரியபோது, எம்.ஜி.புதூர், சி.என்.பாளையம், செம்மடு, எம்.ஜி.ஆர்.புதூர், அம்மன் நகர், ஓ.பி.எஸ்.நகர், சேத்துமடை, தேவிபட்டினம்.
தர்மபுரி மாவட்டம்:
தர்மபுரி, கோட்டை, தர்மபுரி பேருந்து நிலையம், கடைவீதி, விருப்பாட்சிபுரம், குண்டல்பட்டி, ஏ.ரெட்டிஹள்ளி, வி.ஜி.பாளையம், செட்டிக்கரை, நீலாபுரம், கொம்பை, குளியனூர், அரூர், மோப்பிரிபட்டி, அக்ரஹாரம், பேதூர், சந்தாப்பட்டி, அச்சல்வாடி, பி.தாத்தம்பட்டி, சின்னங்குப்பம், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, எல்லப்புடையாம்பட்டி, நதியனூர்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
தஞ்சாவூர் மாவட்டம்:
பேராவூரணி, பெருமகளூர், திருச்சிற்றம்பலம், மின்நகர், வல்லம், சென்னம்பட்டி, பிள்ளையார்பட்டி, அய்யம்பேட்டை, மெலட்டூர்.
பெரம்பலூர் மாவட்டம்:
அய்யனார்பாளையம், பெருநிலா, வெள்ளுவாடி, நெற்குணம், நூத்தப்பூர், பெரம்பலூர் நகரம், அரணாரை, எளம்பலூர், மின் நகர், பாலக்கரை.
திருப்பத்தூர் மாவட்டம்:
மாத்ரபள்ளி, விஷமங்கலம், மாம்பாக்கம், ஏ.கே.மோட்டூர், புதுப்பூங்குளம்.
கரூர் மாவட்டம்:
ஆலமரத் தெரு, ஃபைவ் ரோடு, கருப்பாயி கோவில் தெரு, கச்சேரி பிள்ளையார் கோவில் தெரு, மாரியம்மன் கோவில், அனுமந்தராயன் கோவில், புதுத்தெரு, மார்க்கெட் பகுதி.
திருச்சி மாவட்டம்:
சிங்காரப்பேட்டை, மாதரப்பள்ளி, அத்திப்பாடி, பாவாக்கல், ரெட்டிவலசை, நல்லவம்பட்டி, கோவிந்தாபுரம், நடுப்பட்டி, நாயக்கனூர்.