Page Loader
சொத்துகுவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு சரணடைவதில் இருந்து விலக்கு: உச்ச நீதிமன்றம்
சொத்துகுவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு சரணடைவதில் இருந்து விலக்கு

சொத்துகுவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு சரணடைவதில் இருந்து விலக்கு: உச்ச நீதிமன்றம்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 12, 2024
04:30 pm

செய்தி முன்னோட்டம்

அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கடந்தகால ஆட்சியின் போது, 2006 - 2011ஆம் ஆண்டுகளில் உயர்கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவிற்கு சொத்துக்கள் சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக கடந்த 2011ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கினை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

card 2

சென்னை உயர் நீதிமன்றம் கூறியது என்ன?

குற்றம் சாட்டப்பட்ட பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்ய வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீடு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், கடந்த டிசம்பர் 19ஆம் தேதி, இருவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து தீர்ப்பளித்தார். அதோடு, இருவருக்கும் தலா மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத்தை செலுத்த தவறினால் ஆறு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். எனினும் தன்னுடைய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை 30 நாட்கள் நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டிருந்தார்.

embed

அமைச்சர் பொன்முடிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

#BREAKING || பொன்முடி சிறையில் சரணடைய விலக்கு முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவருடைய மனைவி விசாலாட்சி சிறையில் சரணடைய விலக்கு சொத்து குவிப்பு வழக்கில் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது#chennaihighcourt #ponmudi #ponmudiarrest #thanthitv pic.twitter.com/11N7vAO57a— Thanthi TV (@ThanthiTV) January 12, 2024