"Say No To Drugs & DMK": ட்விட்டரில் தனது பெயரை மாற்றிக்கொண்ட எடப்பாடி பழனிசாமி
ட்விட்டரில் தனது பெயருடன் "Say No To Drugs & DMK" என்ற வாசகத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேர்த்துள்ளார். இது குறித்து பதிவிட்டிருக்கும் அவர், "மாணவர்கள் மற்றும் இளைஞர்களை சீரழிக்கும் போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், போதைப்பொருள் மாபியா விவகாரத்தில் திமுகவின் நிர்வாகிகளே ஈடுபடுவதாக செய்திகள் வருகின்ற நிலையில், இந்த விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், வருகின்ற மார்ச் 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அளவில் கழகத்தின் சார்பில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களை இணைத்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற இருக்கின்றது." என்று தெரிவித்துள்ளார்.
"போதைப்பொருள் ஒழியும் வரை அதிமுகவின் போராட்டம் தொடரும்"- இபிஎஸ்
மேலும், "கழகத்தின் தொடர்ச்சியான போதைப் பொருட்களுக்கு எதிரான போராட்டங்களின் குறியீடாக, என்னுடைய டிவிட்டர் "X" தளத்தின் முகப்பு பக்கத்தில் "Say No To Drugs & DMK" என்ற வாசகத்தை இன்று இணைக்கிறேன். கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை அதிமுகவின் போராட்டம் தொடரும்!" என்று அவர் கூறியுள்ளார். டெல்லி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள திமுக முன்னாள் பிரமுகர் ஜாபர் சாதிக், சூடோபெட்ரின் போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த செய்தி சில நாட்களாகவே பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆளும் திமுக கட்சியை கடுமையாக சாடி வருகிறார்.