சனாதன கொள்கை: கட்சியின் பக்கமா? கொள்கையின் பக்கமா? குழம்பும் அண்ணாமலை
சனாதன கொள்கையை சுற்றி கடந்த சில நாட்களாக, நாடு முழுவதும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன கொள்கையை, டெங்கு மற்றும் மலேரியாவுடன் ஒப்பிட்டு, அதை நாட்டிலிருந்து ஒழிக்க வேண்டும் என பேசி இருந்தார். இவரின் பேச்சு, அவரே எதிர்பார்க்காத அளவிற்கு நாடு முழுவதும் சர்ச்சையை உண்டாக்கியது. இந்நிலையில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒரு இந்து மத சாமியார், சனாதன கொள்கை பற்றி அவதூறாக பேசியதற்காக உதயநிதி தலைக்கு 10 கோடி ரூபாய் பரிசு என அறிவித்தார். உதயநிதி ஸ்டாலினின் கருத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் ஆதரவாகவும், எதிர்த்தும் கருத்து தெரிவித்த நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, எந்த பக்கம் நிற்பது என தடுமாறுவது போல தெரிகிறது.
கட்சியா? கொள்கையா?
பொதுவாக தன்னுடைய கருத்துக்களை பகிரங்கமாக வெளிப்படுத்தும் அண்ணாமலை, பா.ஜ.க கட்சியின் தீவிர ஆதரவாளராகவே பல சமயங்களில் தன்னை முன்னிலை படுத்திக்கொண்டார். இந்த நிலையில், இந்த சனாதன விவகாரத்தில், உ.பி சாமியாரின் பேச்சிற்கு கண்டனத்தை வெளிப்படுத்தினார் அண்ணாமலை. மேலும் அவர், 'உதயநிதி தலைக்கு விலை பேசிய சாமியார் நிஜத்தில் உண்மையான சாமியாராக இருக்க வாய்ப்பில்லை, அப்படிப்பட்டவர் நிச்சயம் சனாதனத்தினை பின்பற்றுபவராகவும் இருக்கமுடியாது' என்றும் கூறியுள்ளார். அதேபோல, 'சனாதனம் பற்றி விமர்சிப்பவர்கள் நாக்கை வெட்டுவேன்' எனக்கூறிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தையும் கண்டித்துள்ளார் அண்ணாமலை. "அகிம்சையை விரும்புபவர்கள்தான் சனாதனவாதிகள்.." என அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் தனது கட்சியை தாண்டி, கொள்கை பக்கம் நிற்கிறாரோ என மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
குழம்பும் அண்ணாமலை
#WATCH | "அகிம்சையை விரும்புபவர்கள்தான் சனாதனவாதிகள்.." -அண்ணாமலை, தமிழ்நாடு பாஜக தலைவர்#SunNews | #KAnnamalai | #Sanathanam pic.twitter.com/EXFQiW8C0X— Sun News (@sunnewstamil) September 13, 2023