Page Loader
சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பணியிடை நீக்கம்
இந்த உத்தரவினை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சகம், துணைவேந்தருக்கு அனுப்பியுள்ளது

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பணியிடை நீக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 09, 2024
12:39 pm

செய்தி முன்னோட்டம்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தங்கவேல் மீது சுமத்தப்பட்ட பல்வேறு முறைகேடு புகார்களை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில், அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவினை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சகம், துணைவேந்தருக்கு அனுப்பியுள்ளது. பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் கணிப்பொறி, இணைய உபகரணங்கள் உள்ளிட்டவைகளை வாங்குவதில் தொடங்கி, ஆதி திராவிட இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் முறைகேடு உள்ளிட்ட பல புகார்கள் எழுந்தன. இந்த புகார்களை விசாரித்த உயர் கல்வித்‌துறை அரசு கூடுதல்‌ செயலாளர்‌ பழனிசாமி மற்றும்‌ அரசு இணைச்‌ செயலாளர்‌ இளங்கோ ஹென்றி தாஸ்‌ ஆகியோர் அடங்கிய விசாரணைக் குழு, முறைகேடு நடந்தது உண்மை என கண்டறிந்தது. இதனை தொடர்ந்து தங்கவேலு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

பல்கலைக்கழக பதிவாளர் பணியிடை நீக்கம்