
வெற்றி துரைசாமியின் தகனத்திற்கு பிறகு சைதை துரைசாமி சூளுரை
செய்தி முன்னோட்டம்
சென்னையின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் உடல், நேற்று மாலை, கண்ணம்மாபேட்டையின் தகனம் செய்யப்பட்டது.
மகனின் உடல் தகனம் செய்யப்பட்டபிறகு, செய்தியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் உரையாற்றிய சைதை துரைசாமி, தனக்கு ஆறுதல் தெரிவிக்க வந்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தார்.
அதோடு,"எனது ஒரு மகன் போனாலும், எனக்கு நிறைய மகன்கள், மகள்களும் இங்கே வந்து இருக்கிறார்கள். எனக்கு பக்க பலமாக நிறைய மகன்கள் இருக்கிறார்கள் என்ற மன வலிமையுடன் இருக்கிறேன்" என்று தழுதழுத்து பேசினார் சைதை துரைசாமி.
அதோடு,"நான் மனம் கலங்கமாட்டேன். சேவையை பிரதானப்படுத்தி வாழ்க்கையை அமைத்துக்கொள்வேன் என இந்நாளில் சூளுரை கொள்கிறேன். இங்குள்ள அனைத்து சமூகத்தினரையும் அரசு பணியில் சேர்க்க வைக்க முயற்சிப்பேன். இதனை உறுதியாக எடுத்துக்கொள்கிறேன்" என தெரிவித்தார்.
ட்விட்டர் அஞ்சல்
சைதை துரைசாமி சூளுரை
#WATCH | மயானத்தில் சைதை துரைசாமி உருக்கமான பேச்சு!#SunNews | #VetriDuraisamy | #RIPVetriDuraisamy pic.twitter.com/TMCykGHO8T
— Sun News (@sunnewstamil) February 13, 2024