சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறப்பு: மண்டல & மகர விளக்கு பூஜை தேதிகள்
செய்தி முன்னோட்டம்
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, வருடாந்திர மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தற்போதைய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி கோயில் நடையைத் திறந்து வைக்கிறார். நாளை கார்த்திகை ஒன்றாம் தேதி என்பதால், ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்களது புனித விரதத்தைத் தொடங்க உள்ளனர். இன்று மாலை நடை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாளை அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட உள்ளனர்.
முக்கியத் தேதிகள்
மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு திருவிழா முக்கியத் தேதிகள்
திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளபடி, நடப்பு சீசனுக்கான முக்கிய நிகழ்வுகளின் அட்டவணை:
நடை திறப்பு: இன்று) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும்; நவம்பர் 17 அதிகாலை 3 மணி முதல் தரிசனம் தொடங்கும்.
மண்டல பூஜை: டிசம்பர் 27-ஆம் தேதி பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறும்; அன்றைய தினம் இரவு கோயில் நடை அடைக்கப்படும்.
மகரவிளக்குத் திருவிழா: ஜனவரி 14-ஆம் தேதி, 2027 நடைபெறவுள்ள மகரவிளக்கு திருவிழாவிற்காக, டிசம்பர் 30-ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மீண்டும் திறக்கப்படும்.
சபரிமலைக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், LIC உடன் இணைந்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு பிரத்யேகக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.