NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை விமான நிலையத்தில் ரூ.1.59 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
    இந்தியா

    சென்னை விமான நிலையத்தில் ரூ.1.59 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

    சென்னை விமான நிலையத்தில் ரூ.1.59 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
    எழுதியவர் Nivetha P
    Jan 19, 2023, 12:35 pm 1 நிமிட வாசிப்பு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.1.59 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
    சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்

    சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனால் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது துபாயில் இருந்து வந்த விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த 2 பயணிகளை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை பரிசோதித்தனர். அதில் லேப்டாப்கள், அதன் உதிரி பாகங்கள் இருந்தது. அதனை பிரித்து பார்த்ததில் 900 கிராம் தங்கம் இருந்தது தெரியவந்தது. இதே போல், சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் வந்த 2 பெண் பயணிகளை சோதனை செய்த பொழுது 8 தங்க வளையல்கள் (766) தங்கம் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

    3 கிலோ 148 கிராம் தங்கம் பறிமுதல் - 4 பெண்கள் உள்பட 7 பேர் கைது

    இதனை தொடர்ந்து, குவைத்தில் இருந்து வந்த விமானத்தில் சென்னையை சேர்ந்த ஆண் பயணியை சந்தேகத்தின்பேரில் தனியறைக்கு அழைத்துசெல்லப்பட்டு சோதனைசெய்தனர். அப்போது அவர் உள்ளாடைக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த 645கிராம் தங்கம் பறிமுதல்செய்யப்பட்டது. தொடர்ந்து இலங்கையில் இருந்து வந்த விமானத்தில், 2பெண் பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் உடமைகளில் எதுவும்இல்லை. எனினும், சந்தேகம் தீராதநிலையில், இரண்டு பெண் சுங்கஅதிகாரிகள் அப்பெண்களை அறைக்குள் அழைத்தசென்று சோதனை செய்துள்ளனர். அதில் அவர்கள் உள்ளாடைக்குள் வைத்து கொண்டுவந்த 837கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் சோதனை செய்ததில் ரூ.1கோடியே 59லட்சம் மதிப்புள்ள 3கிலோ 148கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 7பேர் கைதுசெய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    சென்னை
    விமானம்

    சமீபத்திய

    மின்சார வாகனம் ஊக்குவிப்பு - ரூ.800 கோடியில் உருவாகும் சார்ஜ் நிலையங்கள் எலக்ட்ரிக் வாகனங்கள்
    ஐபிஎல் 2023 : டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் ரிஷப் பந்திற்கு பதிலாக அபிஷேக் போரல் சேர்ப்பு ஐபிஎல் 2023
    கடலூரில் ஆன்லைனில் வாங்கிய பொருளை தீயிட்டு கொளுத்திய பரபரப்பு சம்பவம் கடலூர்
    ஐபிஎல் : ஆரஞ்சு கேப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் பட்டியல் சென்னை சூப்பர் கிங்ஸ்

    சென்னை

    கோயில் கும்பாபிஷேகத்திற்கு சீர் கொண்டுவந்த கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் கோவில் திருவிழாக்கள்
    அதிரடியாக சரிந்த தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரம்! தங்கம் வெள்ளி விலை
    சென்னையில் ஆவின் பால் கெட்டுப்போன விவகாரம் குறித்து அதிகாரிகள் விளக்கம் தமிழ்நாடு
    சென்னை மாநகராட்சி பட்ஜெட்-2023ன் முக்கிய அம்சங்கள் ஓர் பார்வை பட்ஜெட் 2023

    விமானம்

    மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரிய வகை குரங்குகள் - திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை மலேசியா
    இண்டிகோ விமானத்தில் புகைபிடித்த இளம்பெண் கைது கொல்கத்தா
    62 வயதில் முதல்முறை விமான பயணம் - யூடியூபரின் சுவாரஸ்ய கதை! வைரலான ட்வீட்
    விமானத்தில் பறக்க பயமா? இந்த டிப்ஸ்-களை கடைபிடிக்கலாம் மன ஆரோக்கியம்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023