அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் திடீர் உடல் நிலை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி
தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இருதய நோய் சம்மந்தப்பட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், வருவாய்த்துறை அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அதன்காரணமாக மருத்துவமனைக்கு விரைந்து அழைத்து செல்லப்பட்ட அவர், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தற்போது, கே.கே.எஸ்.எஸ்.ஆரின் உடல்நிலை சீரான காரணத்தால், வேறொரு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டு, தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வெளிவந்த பின்னரே, அவரின் டிஸ்சார்ஜ் பற்றி முடிவெடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதுவரை 9 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட கே.கே.எஸ்.எஸ்.ஆர், ஆறுமுறை அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார்.