'ரூ.2000 நோட்டுக்களை டெபாசிட் செய்ய உச்சவரம்பு இல்லை' - ரிசர்வ் வங்கி!
2000 ரூபாய் நோட்டுக்களைத் திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி நேற்று (மே 19) அறிவித்தது. அதோடு, 2000 ரூபாய் நோட்டை வைத்திருப்பவர்கள் அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று தங்களுடைய அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தது ரிசர்வ் வங்கி. மேலும், ஒரே நாளில் ரூ.20,000 வரை மட்டுமே 2000 நோட்டுக்களைக் கொடுத்துப் பிற நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவிப்பில் தெரிவித்திருந்தது ரிசர்வ் வங்கி. ஆனால், இந்தக் கட்டுப்பாடு ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு மட்டுமே, டெபாசிட் செய்வதற்கு இல்லை என தற்போது தெளிவுபடுத்தியிருக்கிறது ரிசர்வ் வங்கி. அதாவது, ஒருவர் தங்களுடைய வங்கிக் கணக்கில் எவ்வளவு 2000 ரூபாய் நோட்டுக்களை வேண்டுமானாலும் டெபாசிட் செய்து கொள்ளலாம். மாற்றுவதற்கு மட்டுமே அதிகபட்சமாக ரூ.20,000 கட்டுப்பாடு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.