Page Loader
'சத்தான பானம்' என்ற பிரிவில் இருந்து போர்ன்விடாவை அகற்ற மத்திய அரசு உத்தரவு 

'சத்தான பானம்' என்ற பிரிவில் இருந்து போர்ன்விடாவை அகற்ற மத்திய அரசு உத்தரவு 

எழுதியவர் Sindhuja SM
Apr 13, 2024
04:28 pm

செய்தி முன்னோட்டம்

வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளது. போர்ன்விடா உள்ளிட்ட அனைத்து பானங்களையும் 'ஹெல்த் டிரிங்க்ஸ்' வகையிலிருந்து அகற்றுமாறு அவர்களுக்கு அந்த அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. "குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம்(என்சிபிசிஆர்) என்பது சிஆர்பிசி சட்டம் 2005 இன் பிரிவு 14ன் கீழ் விசாரணை நடத்திய பிறகு அமைக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். எஃப்எஸ்எஸ் சட்டம் 2006ன் கீழ் வரையறுக்கப்பட்ட 'ஆரோக்கிய பானம்' என்ற பட்டியலுக்கு கீழும் FSSAI மற்றும் Mondelez India Food Pvt Ltd சமர்ப்பித்த விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு கீழும் போர்ன்விடா போன்ற பானங்கள் வராது" என்று ஏப்ரல் 10 தேதியிட்ட அறிவிப்பில் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

போர்ன்விடா

நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு 

ஏற்றுக்கொள்ளக்கூடிய வரம்புகளை விட அதிகமாக போர்ன்விடா போன்ற பானங்களில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளதால் NCPCR அதை 'சத்தான பானம்' என்ற பிரிவில் இருந்து அகற்ற உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, பாதுகாப்புத் தரங்கள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறிய பவர் சப்ளிமெண்ட்டுகளை 'ஆரோக்கிய பானங்கள்' என்று முன்னிறுத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தை (FSSAI) NCPCR கேட்டுக் கொண்டது.