Page Loader
'லிவ்-இன் உறவுகளைப் பதிவு செய்யாவிட்டால் 6 மாத சிறைத்தண்டனை': உத்தரகாண்ட் பொது சிவில் சட்டம் 

'லிவ்-இன் உறவுகளைப் பதிவு செய்யாவிட்டால் 6 மாத சிறைத்தண்டனை': உத்தரகாண்ட் பொது சிவில் சட்டம் 

எழுதியவர் Sindhuja SM
Feb 06, 2024
01:47 pm

செய்தி முன்னோட்டம்

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் லிவ்-இன் உறவுகளில் இருந்தால் அவர்கள் கண்டிப்பாக அதை மாவட்ட நிர்வாகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரகாண்ட் பொது சிவில் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் பொது சிவில் சட்ட மசோதா இன்று தான் உத்தரகாண்ட் சட்டசபையில் தாக்கல் செய்யபட்டுள்ளது. அந்த மசோதா நிறவேற்றப்பட்டு, அதற்கு ஆளுநர் அனுமதி வழங்கிவிட்டால் அது சட்டமாகிவிடும். இந்நிலையில், லிவ்-இன் உறவுகள் குறித்து அந்த மசோதாவில் கூறப்பட்டிருக்கும் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்த அனைவருக்கும் இந்த சட்டம் பொருந்தும். உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் பிற மாநிலத்தில் வாழ்ந்து வந்தாலும் அவர்களுக்கும் இந்த விதிகள் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் 

லிவ்-இன் உறவுகளை மாவட்ட நிர்வாகம் அங்கீகரிக்க மறுக்கலாம் 

லிவ்-இன் உறவுகளில் இருக்கும் 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக தங்கள் உறவை மாவட்ட நிர்வாகத்தில் பதிவு செய்த்திருக்க வேண்டும் என்றும், 21 வயதுக்குக் குறைவானவர்கள் ஒன்றாக வாழ விரும்பினால் அவர்கள் பெற்றோரின் ஒப்புதலுடன் அதை மாவட்ட நிர்வாகத்தில் பதிவு செய்த்திருக்க வேண்டும் என்றும் பொது சிவில் சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளது. "பொதுக் கொள்கைகள் மற்றும் ஒழுக்கத்திற்கு எதிரான" லிவ்-இன் உறவுகள் பதிவு செய்யப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, லிவ் இன் உறவில் இருக்கும் ஒருவர் திருமணமானவராக இருந்தால் அல்லது 18 வயதுக்கு கீழ் உள்ளவராக இருந்தால், அந்த உறவுகள் சட்டப்படி பதிவு செய்யப்படாது.

உத்தரகண்ட் 

லிவ்-இன் உறவுகளைப் பதிவு செய்யாவிட்டால் என்ன ஆகும்?

லிவ்-இன் உறவின் பிரகடனங்களைச் சமர்ப்பிக்கத் தவறினால், அல்லது தவறான தகவல்களை வழங்கினால், அவர்களுக்கு மூன்று மாதங்கள் சிறை, ரூ.25,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். லிவ்-இன் உறவைப் பதிவு செய்யத் தவறினால், அதிகபட்சமாக ஆறு மாத சிறைத்தண்டனை, ரூ.25,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். பதிவு செய்வதில் 1 மாதம் தாமதம் ஏற்பட்டாலும், மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை, ரூ.10,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். அப்படி பதிவு செய்யப்படும் உறவுகளை அங்கீகரிப்பதற்கு முன், மாவட்ட நிர்வாகம் யாரை வேண்டுமானாலும் அழைத்து விசாரிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. லிவ்-இன் உறவில் இருப்பவர்களுக்கு குழந்தை பிறந்தால் அது அவர்களது சட்டபூர்வமான குழந்தை/வாரிசாக கருதப்படும் என்றும் புதிய உத்தரகாண்ட் பொது சிவில் சட்டம் கூறுகிறது.