Page Loader
இன்று முதல் அமலுக்கு வந்தது மின் கட்டண சலுகை - அரசாணை வெளியீடு
இன்று முதல் அமலுக்கு வந்தது மின் கட்டண சலுகை - அரசாணை வெளியீடு

இன்று முதல் அமலுக்கு வந்தது மின் கட்டண சலுகை - அரசாணை வெளியீடு

எழுதியவர் Nivetha P
Nov 01, 2023
12:13 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த மின் கட்டண சலுகை இன்று(நவ.,1) முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மு.க.ஸ்டாலின் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், சென்னை மட்டுமின்றி பிற மாநகராட்சி புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள 10க்கும் குறைவான மின்தூக்கி வசதிகள் மற்றும் 3 மாடிக்கு மேல் இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளின் மின்சார கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.8ல் இருந்து ரூ.5.50 காசாக குறைக்கப்படும் என்று அறிவித்தார்.

கட்டணம் 

புதிய தாழ்வழுத்த மின்கட்டண வகை அறிமுகம் 

சென்னை மற்றும் பிற மாநகராட்சி புறநகர் பகுதிகளில் அதிகளவு குறைந்த வீடுகளை கொண்ட அடுக்குமாடி குறியிருப்புகள் உள்ள காரணத்தினால் முதல்வரின் இந்த அறிவிப்பு மக்களை பெரும் சந்தோஷம் அடைய செய்தது. இந்நிலையில், முதல்வரின் இந்த அறிவிப்பானது இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதனிடையே தமிழக அரசின் கொள்கை வழிகாட்டுதல்படி, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதிய தாழ்வழுத்த மின்கட்டண வகையான IE என்பதை அறிமுகப்படுத்தியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. ஒரு யூனிட்டுக்கு ரூ.8 என்பது நடுத்தர மக்களை மிகவும் பாதிப்பதாக பல குடியிருப்போர் நலசங்கங்கள் கவலை தெரிவித்த நிலையில் முதல்வர் இந்த மின் கட்டண சலுகையினை கொண்டு வந்துள்ளார்.