Page Loader
திமுக அமைச்சரைவை மாற்றத்துக்கு இது தான் காரணம்: எடப்பாடி கே பழனிசாமி குற்றச்சாட்டு
திமுக அமைச்சரைவை மாற்றத்துக்கு இது தான் காரணம்

திமுக அமைச்சரைவை மாற்றத்துக்கு இது தான் காரணம்: எடப்பாடி கே பழனிசாமி குற்றச்சாட்டு

எழுதியவர் Nivetha P
May 11, 2023
07:05 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த இரண்டு நாட்களாக தமிழக அரசின் அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தமிழ்நாடு முழுவதும் பலப்பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக, சில நாட்களுக்கு முன்பு மாநில அரசின் நிதியமைச்சராக பதவி விகித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஆடியோ லீக் ஆனது. அதில் 3௦௦௦௦ கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என்று கூறப்பட்டது. அதையடுத்து, டாஸ்மாக் ஊழல் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்நிலையில், பிடிஆர் தொழில்நுட்பத்துறை அமைச்சராக மாற்றம் செய்யபப்ட்டார். அவர் மட்டுமல்லாமல், 5 அமைச்சர்கள் துறைகள் மாற்றப்பட்டனர். திமுக ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஊழல் நடந்துள்ளது என்பதால் தான் அமைச்சரவையில் மாற்றம் நிகழ்ந்துள்ளது என்று எதிர்கட்சித் தலைவரான எடப்பாடி கே பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். அமைச்சரவையின் மாற்றம் ஏற்பட்டதன் பின்னணி என்னவாக இருக்கும்?

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post