ரூ.2,000 நோட்டுகளை திரும்பப்பெறும் ரிசர்வ் வங்கி - பரபரப்பு தகவல்
இந்தியாவில் பிரதமர் மோடி மேற்கொண்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு அறிமுகப்படுத்தப்பட்டது தான் ரூ.2000 நோட்டுகள். 1934ம் ஆண்டு ஆர்பிஐ சட்டத்தின் பிரிவு 24(1)ன் கீழ், பொருளாதாரத்தின் நாணய தேவையினை விரைவாக பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் நவம்பர் 2016ல் ரூ.2000 நோட்டுகள் புழக்கத்திற்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகள் திரும்பப்பெற முடிவு செய்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றினை அண்மையில் வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் 23ம் தேதி முதல் பொதுமக்கள் தங்கள் வசமுள்ள ரூ.2000நோட்டுக்களை இந்திய ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் அல்லது வங்கி கிளைகளில் கொடுத்து வங்கிக்கணக்குகளில் வரவு வைத்து கொள்ளலாம. அல்லது வேறு பண தாள்களாக மாற்றி கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.