UPI பணப் பரிவர்த்தனை வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்திய ரிசர்வ் வங்கி
இரு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டமானது கடந்த டிசம்பர் 6ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை இன்று அறிவித்திருக்கிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ். அதன்படி, ரெப்போ ரேட்டில் ஐந்தாவது முறையாக் மாற்றம் செய்யாமல் அதே 6.50% ஆகவே தொடர முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் ஒரு முக்கிய முடிவாக, கல்வி நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் யுபிஐ சேவை மூலம் அதிகபட்மாக ரூ.5 லட்சம் வரை பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள அனுமதியளித்திருக்கிறது ரிசர்வ் வங்கி. முன்னர் இந்த வரம்பு ரூ.1 லட்சமாக இருந்த நிலையில், தற்போது ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.