ரிசர்வ் வங்கிக்கு ரஷ்ய மொழியில் வெடிகுண்டு மிரட்டல்
மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கிக்கு (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்ததாக செய்தி நிறுவனம் ஏஎன்ஐ தெரிவித்துள்ளது. இந்த மிரட்டல் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ரஷ்ய மொழியில் எழுதப்பட்ட மிரட்டல் மின்னஞ்சல், ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வந்தது. வங்கியில் திட்டமிட்ட வெடிகுண்டு வெடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. "இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மிரட்டல் மின்னஞ்சல் வந்தது. அந்த மின்னஞ்சல் ரஷ்ய மொழியில் இருந்தது. எம்ஆர்ஏ மார்க் காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்று மும்பை காவல்துறையின் காவல்துறை உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
Twitter Post
டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது
அதேபோல இன்று மற்றொரு சம்பவத்தில், டெல்லியில் உள்ள ஆறுக்கும் மேற்பட்ட முக்கிய தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் மின்னஞ்சலில் அனுப்பப்பட்டன. தகவல் அறிந்ததும் டெல்லி தீயணைப்புப் படையினரும், காவல்துறையினரும் விரைந்து வந்து, மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முழுமையான சோதனைகளை மேற்கொண்டனர். தீவிர சோதனைக்கு பின், சந்தேகப்படும்படியான பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. டெல்லியில் உள்ள 40க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு கடந்த வாரம் 30,000 டாலர் பணம் கேட்டு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. குறிப்பிடத்தக்கது. நவம்பர் 19 அன்று, வெடிகுண்டு மிரட்டல்கள் மற்றும் அதுபோன்ற அவசரநிலைகளைக் கையாள்வதற்கான விரிவான நிலையான செயல்பாட்டு நடைமுறை செயல் திட்டத்தை உருவாக்குமாறு டெல்லி அரசு மற்றும் டெல்லி காவல்துறைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.