Page Loader
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டை - உச்சநீதிமன்றம் உத்தரவு! 
3 மாதம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க உத்தரவு

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டை - உச்சநீதிமன்றம் உத்தரவு! 

எழுதியவர் Siranjeevi
Apr 21, 2023
11:15 am

செய்தி முன்னோட்டம்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மூன்று மாதத்துக்குள் ரேஷன் கார்டு அட்டை வழங்க வேண்டும் என மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மக்கள் தொகை விதம் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இந்த காரணத்தினால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டைகள் தரப்படுவது கிடையாது. எனவே, அவர்களுக்கு ரேஷன் அட்டை வழங்க வேண்டும் எனவும், மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், மனு விசாரணைக்கு வந்த நிலையில் புலம் பெயர் தொழிலாளர்கள் 10 கோடி பேர் தேசிய உணவு பாதுகாப்பு சட்ட பலன்களை பெறவில்லை எனவும் அவர்களுக்கு முழுப் பலன்கள் கிடைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post