NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெங்களூரு குண்டுவெடிப்பு: குற்றவாளி பற்றி தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெங்களூரு குண்டுவெடிப்பு: குற்றவாளி பற்றி தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம் 

    பெங்களூரு குண்டுவெடிப்பு: குற்றவாளி பற்றி தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம் 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 06, 2024
    04:52 pm

    செய்தி முன்னோட்டம்

    மார்ச் 1ஆம் தேதி பெங்களூரில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் வெடிகுண்டு வைத்த குற்றவாளி குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று அறிவித்துள்ளது.

    குற்றவாளியின் முகத்துடன் கூடிய 'வான்டெட்' போஸ்ட்டரை வெளியிட்டுள்ள என்ஐஏ, தகவல் அளிப்பவரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

    பெங்களூரு குண்டலஹள்ளியில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த மார்ச் 1ஆம் தேதி குறைந்த தீவிரம் கொண்ட ஒரு வெடிகுண்டு வெடிக்க வைக்கப்பட்டது. இதனால், 10 பேர் காயமடைந்தனர்.

    இந்த வழக்கில் சந்தேக நபர் ஒருவரின் சிசிடிவி காட்சிகள் காவல்துறைக்கு கிடைத்துள்ளன.

    பெங்களூரு

    விசாரணையை மேற்கொள்ள என்ஐஏவுக்கு உத்தரவிட்ட மத்திய உள்துறை அமைச்சகம்

    அவரது வீடியோக்கள் சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து வைராகி வருகிறது.

    ஆனால், இந்த குண்டுவெடிப்பு வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

    மத்திய குற்றப்பிரிவு மற்றும் என்ஐஏ ஆகிய இரண்டு ஏஜென்சிகளை சேர்ந்த அதிகாரிகளும் சந்தேக நபரை தேடி வருகின்றனர்.

    கர்நாடக அரசு விசாரணையை மத்திய ஏஜென்சியிடம் ஒப்படைக்காததால், விசாரணையை மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டதை அடுத்து, என்ஐஏ நேற்று தனது விசாரணையைத் தொடங்கியது.

    நகர காவல்துறைக்கு முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளதாகவும், சந்தேக நபரை காவல்துறையினர் பிடித்துவிடுவர் என்றும் கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா இன்று கூறினார்.

    இந்நிலையில், தற்போது, குற்றவாளி குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று என்ஐஏ அறிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பெங்களூர்
    குண்டுவெடிப்பு

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    பெங்களூர்

    பிக்பாஸ் டானியலிடம் நூதன மோசடி- குத்தகைக்கு வீடு வழங்குவதாக ₹17 லட்சத்தை ஏமாற்றிய கும்பல் திரைப்படம்
    சென்னை விமான நிலையத்தில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்  சென்னை
    இந்திய ஆடவர் அணி கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராகும் விவிஎஸ் லட்சுமணன் இந்திய கிரிக்கெட் அணி
    தொடங்கப்படாத புக்கிங்: துருவநட்சத்திரம் வெளியாவதில் உள்ள சிக்கல்கள் என்ன? கௌதம் வாசுதேவ் மேனன்

    குண்டுவெடிப்பு

    உணவு பற்றாக்குறை, இருளில் மூழ்கிய காஸா - ஹமாஸ் படைக்கு குறிவைத்த இஸ்ரேல் இஸ்ரேல்
    500 பேரை பலி கொண்ட காசா மருத்துவமனை தாக்குதல்  இஸ்ரேல்
    கேரளாவில் தொடர் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, 20க்கும் மேற்பட்டோர் காயம் கேரளா
    கேரளாவில் நடந்த கிறிஸ்தவ கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு: கேரள முதல்வரை தொடர்பு கொண்டார் அமித்ஷா   கேரளா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025