Loading...
அரசியலில் இருந்து விலகினார் மருத்துவர் ராமதாஸ்! பாமகவை இனி அன்புமணி ராமதாஸ் பார்த்துக் கொள்வார் என அறிவிப்பு
அரசியலில் இருந்து விலகினார் மருத்துவர் ராமதாஸ்

அரசியலில் இருந்து விலகினார் மருத்துவர் ராமதாஸ்! பாமகவை இனி அன்புமணி ராமதாஸ் பார்த்துக் கொள்வார் என அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Jul 25, 2026
01:39 pm

செய்தி முன்னோட்டம்

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனருமான மருத்துவர் எஸ்.ராமதாஸ், தனது வயது மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பல தசாப்தங்களாக தமிழ்நாட்டு அரசியலில் வன்னியர் சமுதாய மக்களின் உரிமைகளுக்காகவும், சமூக நீதிப் போராட்டங்களுக்காகவும் தீவிரமாக செயலாற்றி வந்த அவரது இந்த அறிவிப்பு, கட்சித் தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு விபரம் இங்கே:-

அன்புமணி ராமதாஸ்

பாமகவின் முழுப் பொறுப்பையும் ஏற்றார் அன்புமணி

மருத்துவர் ராமதாஸ் அரசியல் ஓய்வு அறிவிப்பைத் தொடர்ந்து, அரசியலை இனி தனது மகனும் மருமகளும் பார்த்துக் கொள்வார்கள் என அறிவித்துள்ளார்.

இதன் மூலம், கட்சிக்குள் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்து, தற்போது பாட்டாளி மக்கள் கட்சியின் முழுமையான தலைமை மற்றும் நிர்வாகப் பொறுப்புகள் அனைத்தும் அன்புமணி கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது.

இனி கட்சியின் முக்கிய முடிவுகள், தேர்தல் வியூகங்கள் மற்றும் கூட்டணிக் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் அன்புமணி ராமதாஸின் வழிகாட்டுதலின் கீழேயே மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Embed

ADVERTISEMENT

அரசியல் பயணம்

பல தசாப்தகால சமூக நீதி அரசியல் பயணம்

1989 ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியைத் தொடங்கிய மருத்துவர் ராமதாஸ், வட தமிழ்நாட்டில் வன்னியர் மக்களுக்கான இடஒதுக்கீடு போராட்டம், மதுவிலக்கு பிரச்சாரம், தமிழ் மொழி உரிமை மற்றும் விவசாயிகளின் நலன்களுக்காகத் தொடர் போராட்டங்களை நடத்தியவர்.

தேர்தல் அரசியலில் நேரடியாகப் போட்டியிடாமல், கட்சியின் நிறுவனராக மட்டுமே இருந்து தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் மாற்றங்களில் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழ்ந்தார்.

ADVERTISEMENT

கட்சி மறுசீரமைப்பு

புதிய அரசியல் சூழலில் பாமகவை மறுசீரமைக்கத் திட்டம்

தமிழகத்தில் தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்துள்ள நிலையில், பாமகவை அடிமட்டம் முதல் வலுப்படுத்தும் பணிகளில் அன்புமணி ராமதாஸ் கவனம் செலுத்தவுள்ளார்.

இளைஞர்களைக் கவரும் வகையிலான நவீன அரசியல் அணுகுமுறை, கல்வி, சுகாதாரம் மற்றும் பசுமை அரசியலை முதன்மைப்படுத்தி, மாவட்ட அளவிலான கட்சி அமைப்புகளை மறுசீரமைக்கும் பணிகளை அவர் தீவிரப்படுத்தவுள்ளார்.

ADVERTISEMENT