
TCSஸில் இருந்து பதவி விலகினார் ராஜேஷ் கோபிநாதன்: புதிய CEO நியமனம்
செய்தி முன்னோட்டம்
ஐடி சேவைகளை வழங்கும் இந்திய நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸின்(TCS) தலைமைச் செயல் அதிகாரி ராஜேஷ் கோபிநாதன் பதவி விலகினார்.
இதனையடுத்து, கே கிருதிவாசன் என்பவர் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
மேலும் பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டு, வரும் நிதியாண்டில் கிருதிவாசன், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்பார் என்று கூறப்பட்டுள்ளது.
"2023 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி முதல் கே.கிருத்திவாசனை CEOவாக நியமிக்க வாரியம் பரிந்துரைத்துள்ளது. கிருத்திவாசன் அடுத்த நிதியாண்டில் நிர்வாக இயக்குநராகவும், CEOவாகவும் நியமிக்கப்படுவார்" என்று இதற்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா
யாரிந்த கிருதிவாசன்?
கோபிநாதன் 6 வருடங்களாக TCSயில் CEOவாக பணியாற்றி இருக்கிறார். ஜனவரி 2027 வரை இவருக்கு அந்த பதவி வழங்கப்பட்டிருந்தது.
கே கிருதிவாசன், 1989 இல் TCS நிறுவனத்தில் சேர்ந்தார். அதன் பிறகு, விநியோகம், உறவு மேலாண்மை, பெரிய நிரல் மேலாண்மை மற்றும் விற்பனை ஆகியவற்றில் தலைமைப் பதவிகளை வகித்தார்.
இந்த பதவி உயர்வுக்கு முன், கிருத்திவாசன் டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் காப்பீட்டு வணிகப் பிரிவின் தலைவராக பணியாற்றி கொண்டிருந்தார்.
இவர் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டமும், ஐஐடி கான்பூரில் தொழில்துறை மற்றும் மேலாண்மை பொறியியல் பட்டமும் பெற்றவர் ஆவார்.