Page Loader
55% ரயில் விபத்துக்களுக்கு ரயில்வே ஊழியர்களின் தவறு தான் காரணம் 
மார்ச் 22, 2020 முதல் அனைத்து பயணிகள் ரயில்களும் முழுமையாக நிறுத்தப்பட்டன.

55% ரயில் விபத்துக்களுக்கு ரயில்வே ஊழியர்களின் தவறு தான் காரணம் 

எழுதியவர் Sindhuja SM
Jun 12, 2023
10:03 am

செய்தி முன்னோட்டம்

இந்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் தரவுகளின்படி, 2017-18 மற்றும் 2021-22ஆம் வருடங்களுக்கு இடையில் ஏற்பட்ட 55 சதவீத ரயில் விபத்துகள் ரயில்வே ஊழியர்களின் தவறுகளால் நிகழ்ந்ததாகும். மேலும், 2017-18 மற்றும் 2022-23ஆம் வருடங்களுக்கு இடையில் ஏற்பட்ட 75 சதவீத விபத்துகள் ரயில் தடம் புரண்டதன் காரணமாக நிகழ்ந்திருக்கிறது. ரயில்வே பாதுகாப்பு ஆணையம்(CRS) மற்றும் ரயில்வே அமைச்சகத்தின் தரவை பகுப்பாய்வு செய்து நியூஸ் 18 ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2021-22ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஏற்பட்ட 55 சதவீத ரயில் விபத்துகள் மனித தவறுகளால் ஏற்பட்டதாகும். அதே நேரம், 2018-19ஆம் ஆண்டுகளில் அது 89 சதவீதமாக இருந்திருக்கிறது. மேலும், இவற்றின் சராசரி 75 சதவீதமாகும்.

details

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ரயில் விபத்துகள் குறைந்தது 

2017-18 மற்றும் 2022-23 க்கு இடையில், 292 ரயில் விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் 220 விபத்துகள்(75%) ரயில் தடம் புரண்டதால் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக, 28 விபத்துகள் தீ விபத்துகளால் ஏற்பட்டுள்ளன. முன்பிருந்ததை விட, கொரோனா ஊரடங்கிற்கு பின்பு, இந்தியா முழுவதும் ரயில் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால் கடந்த மூன்று வருடங்களில் மீண்டும் அதிக விபத்துகள் ஏற்பட தொடங்கியுள்ளன. 2020-21ஆம் ஆண்டில், கொரோனா லாக்டவுன் காரணமாக, மார்ச் 22, 2020 முதல் அனைத்து பயணிகள் ரயில்களும் முழுமையாக நிறுத்தப்பட்டன. மே 2020 முதல், சுமார் 230 ரயில்கள் மட்டும் மீண்டும் ஆங்காங்கே இயக்கப்பட்டன. ஆனால் ஒட்டுமொத்த ரயில் போக்குவரத்து குறைவாக இருந்ததால், விபத்துக்கள் அவ்வளவாக ஏற்படவில்லை.