Page Loader
தேர்தல் நடக்க இருக்கும் மிசோரத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரை
இந்த பாதயாத்திரையின் போது பாரம்பரிய நடனங்களும் இடம் பெற்றன.

தேர்தல் நடக்க இருக்கும் மிசோரத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரை

எழுதியவர் Sindhuja SM
Oct 16, 2023
03:50 pm

செய்தி முன்னோட்டம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று(அக் 16) மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில் பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது அவருக்கு ஏராளமானோர் வரவேற்பு அளித்தனர். மிசோரத்தில் வரும் நவம்பர் 7ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இன்று மிசோரம் தலைநகரை அடைந்த ராகுல் காந்தி, சன்மாரி சந்திப்பில் இருந்து தனது பாதயாத்திரையை தொடங்கினார். பின், சாலையின் இருபுறமும் தனக்காக காத்திருந்த மக்களுக்கு கை அசைத்து நன்றி தெரிவித்த அவர், பாதயாத்திரையின் போது தன்னைச் சந்திக்க வந்தவர்களுடன் கைகுலுக்கி உரையாடினார். இந்த பாதயாத்திரையின் போது பாரம்பரிய நடனங்களும் இடம் பெற்றன. ராஜ்பவன் வரை சுமார் 4-5 கி.மீ தூரம் நடந்து சென்ற அவர், ஆளுநர் மாளிகை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

ட்விட்டர் அஞ்சல்

பாதயாத்திரையின் போது எடுக்கப்பட்ட வீடியோ