Page Loader
மத்தியப் பிரதேசத்தில் இந்துக்களை மதம் மாற்றிய தீவிர இஸ்லாமியக் குழு
ஐந்து சந்தேக நபர்களும் இந்து பெண்களை திருமணம் செய்து கொண்திருப்பது போலீஸாரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் இந்துக்களை மதம் மாற்றிய தீவிர இஸ்லாமியக் குழு

எழுதியவர் Sindhuja SM
May 16, 2023
11:35 am

செய்தி முன்னோட்டம்

மே 9 அன்று மத்தியப் பிரதேச காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் படை(ATS), ஹிஸ்ப்-உத்-தஹ்ரீரின்(HuT) என்ற தீவிர இஸ்லாமிய அமைப்பினரை பிடித்தனர். இந்த இஸ்லாமிய அமைப்பு, பொதுமக்களை மத மாற்றும் பணியில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஐந்து சந்தேக நபர்களும் இந்து பெண்களை திருமணம் செய்து கொண்திருப்பது போலீஸாரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், அந்த சந்தேக நபர்களில் இருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இஸ்லாத்திற்கு மாறியுள்ளனர். போபாலை சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் யாசிர் கான் மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது சலீம் ஆகிய இரண்டு முக்கிய குற்றம் சாட்டப்பட்டவர்கள் சில ஆண்களுக்கு முன்பு வரை இந்துக்களாக இருந்தவர்கள் ஆவர்.

details

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஐந்து பேர் இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாற்றப்பட்டனர்

இதில் முகமது சலீம் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்புவரை, ஓய்வுபெற்ற ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் அசோக் ஜெயினின் மகன் சௌரப் ராஜ்வைத்யா என்று அழைக்கப்பட்டார். முகமது சலீம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு கல்லூரியின் மருந்தியல் பிரிவில் மூத்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த கல்லூரி ஒரு அரசியல்வாதியின் குடும்பத்தால் நடத்தப்படுகிறது. முகமது சலீம்(பழைய பெயர்- சௌரப் ராஜ் வைத்யா), அப்துர் ரஹ்மான் (பழைய பெயர்- தேவி நாராயண் பாண்டா) மற்றும் முகமது அப்பாஸ் அலி (பழைய பெயர்- பெனு குமார்) உட்பட குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஐந்து பேர் இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாற்றப்பட்டவர்கள் ஆவர். முகமது சலீமின் பெற்றோர்கள், தங்களது மகனை ஒருவர் மூளைச் சலவை செய்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றியதாக குற்றம்சாட்டியுள்ளனர்.