அலறிய பயணிகள்? அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்ட கத்தார் ஏர் லைன்ஸ் விமானம்!
கத்தாரில் இருந்து இந்தோனேசியா சென்ற விமானம் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்டது. கத்தார் நாட்டின் தோகாவிலிருந்து 368 பயணிகளுடன் கத்தார் ஏர்லைன்ஸ் இந்தோனேசியாவின் ஜாகர்த்தா நோக்கி சென்றுள்ளது. 39 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானம் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. சரிசெய்ய விமானப் பொறியாளர்கள் முயற்சித்தும் முடியாததால் விமானத்தை தரையிறக்க முடிவு செய்தனர். அதன்படியே, அவசரமாக சென்னை விமான நிலையத்தை தொடர்புகொண்டனர். டெல்லி கட்டுப்பாடு அனுமதி வழங்கிய பின் தரையிறக்கி விமானத்தை சரிசெய்தனர். 6 மணிநேரம் பழுது பார்க்கப்பட்டு சென்னையில் இருந்து மீண்டும் ஜெகத்ராவுக்கு புறப்பட்டு சென்றது. விமானி தகுந்த நேரத்தில் எடுத்த நடவடிக்கையால் பெரும் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.