புனே போர்ஷே விபத்து: காரை ஓட்டிய சிறுவனின் ரத்த மாதிரியில் முறைகேடு செய்ததாக 2 மருத்துவர்கள் கைது
செய்தி முன்னோட்டம்
போர்ஷே கார் விபத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டீன் ஏஜ் ஓட்டுநரின் ரத்த மாதிரியை கையாடல் செய்த குற்றச்சாட்டின் பேரில் புனேவில் உள்ள சாசூன் பொது மருத்துவமனையின் இரண்டு மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.
புனேவில் உள்ள சசூன் மருத்துவமனையின் தடயவியல் துறைத் தலைவர் டாக்டர் அஜய் தாவேரும், சசூனின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஸ்ரீஹரி ஹார்னரும், போர்ஷே விபத்து வழக்கின் ரத்த அறிக்கைகளில் முறைகேடு செய்ததற்காகவும், சாட்சியங்களை சிதைத்ததற்காகவும் கைது செய்யப்பட்டனர்.
விபத்தின் போது அந்த காரை ஓட்டிய சிறுவன் குடிபோதையில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
புனே
ஜூன் 5 வரை கண்காணிப்பு இல்லத்திற்கு அனுப்பப்பட்ட சிறுவன்
விபத்தை ஏற்படுத்திய அந்த சிறுவனுக்கு முதலில் சிறார் நீதி வாரியம் ஜாமீன் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
புனே போர்ஷே விபத்தில் இரண்டு பேரை கொன்ற அந்த சிறுவனுக்கு சிறார் நீதி வாரியம் ஜாமீன் வழங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், அதன் பிறகு இந்த வழக்கை மொத்தமாக மறுஆய்வு செய்யுமாறு சிறார் நீதி மன்றத்திடம் காவல்துறை விண்ணப்பத்ததைத் தொடர்ந்து, அந்த சிறுவன் ஜூன் 5 வரை கண்காணிப்பு இல்லத்திற்கு அனுப்பப்பட்டான்.
இந்த விபத்து தொடர்பாக ரியல் எஸ்டேட் தொழிலாளியான அந்த சிறுவனின் தந்தை மற்றும் அவரது தாத்தாவை போலீசார் கைது செய்தனர்.