புனே விபத்து: போர்ஷே காரின் ஜி.பி.எஸ்., கேமராக்கள் ஆய்வு
கடந்த வாரம் குடிபோதையில், காரை ஓட்டி 2 பேரை கொன்ற வாலிபரின் தாத்தா மற்றும் நண்பரிடம் புனே போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை அதிகாரியின் கூற்றுப்படி, ஒரு குழு காரை ஆய்வு செய்து, அதிலுள்ள ஜிபிஎஸ் மற்றும் உள் கேமராக்கள் ஆதாரங்களுக்காக ஆய்வுக்கு சேகரித்துள்ளது. வாலிபரின் வீட்டிலிருந்து, விபத்து நடந்த இடம் வரை போர்ஷே சென்ற முழு வழியின் சிசிடிவி காட்சிகளை போலீசார் சேகரித்துள்ளனர். இது குறித்து, விபத்தின் போது காரில் உடன் இருந்த வாலிபரின் நண்பர் மற்றும் அந்த வாலிபரின் டிரைவரை போலீசார் விசாரித்தனர். மேலும் வாலிபரின் தாத்தா- ஸ்போர்ட்ஸ் கார் வைத்திருந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இணை உரிமையாளர் என்பதால், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
'குடிபோதையில் இருந்தாலும் பரவாயில்ல, ஓட்ட விடுங்கள்' என தந்தை கூறியுள்ளார்
முதற்கட்ட விசரணையில், காரின் டிரைவர், இளைஞரின் தந்தையிடம், அவர் மிகவும் குடிபோதையில் இருப்பதாகவும், அதோடேயே கார்-ஐ ஓட்ட முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதற்கு இளைஞனின் தந்தை, "அவரை ஓட்ட அனுமதி" என்று ஓட்டுநருக்கு அறிவுறுத்தியதாகவும் போலீசார் தெரிவித்தனர். மறுபுறம், கார் விபத்திற்கு காரணம், டிரைவர் தான் என விபத்தை ஏற்படுத்திய இளைஞனும் அவனது தந்தையும் கூறியதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றம் சாட்டப்பட்ட மைனரின் இரண்டு நண்பர்கள் அந்த நேரத்தில் அவருடன் இருந்ததாகவும், இந்த கூற்றுகளுக்கு அவர்கள் தான் சாட்சி என்றும் அவர்கள் தெரிவித்தனர்.இந்த நிலையில், சிறுவனை வயது முதிர்ந்தவராக விசாரிக்கவும், அவனை சிறார் என கருதும் உத்தரவை மறுபரிசீலனை செய்யவும் கோரி, புனே காவல்துறை மனு தாக்கல் செய்துள்ளது.