புனே: உஜானி அணையில் படகு கவிழ்ந்ததால் 6 பேர் பலி
செய்தி முன்னோட்டம்
மகாராஷ்டிரா மாநிலம் கலாஷி கிராமத்திற்கு அருகே உள்ள உஜானி அணையில் நேற்று மாலை படகு கவிழ்ந்ததால் குறைந்தது 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
புனே மாவட்டத்தில் உள்ள இந்தாபூர் தஹ்சீலுக்கு அருகில், அந்த நகரத்திலிருந்து சுமார் 140-கிமீ தொலைவில் இந்த விபத்து நடந்துள்ளது.
தேசிய பேரிடர் மீட்புப் படை(NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை(SDRF) ஆகியவற்றின் குழுக்கள் தேடுதல், மீட்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளன.
இறந்தவர்களில் மூன்று ஆண்கள், ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்று இந்தாபூர் தாசில்தார் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
"ஏழு பேர் படகில் இருந்தனர். அவர்களில் ஒருவர் நீந்தி பாதுகாப்பாக சென்று தகவல் கொடுத்தார்." என்று புனே போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் கூறியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
படகு கவிழ்ந்ததால் 6 பேர் பலி
#WATCH | Maharashtra: Search and rescue operation underway for the six people who went missing after a boat capsized last evening in Ujani dam waters near Kalashi village, close to Indapur Tahseel of Pune district. pic.twitter.com/J99EmOM25X
— ANI (@ANI) May 22, 2024