அதிகார துஷ்ப்ரயோகம் செய்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியின் சாதி செர்டிபிகேட்டும் போலி?
செய்தி முன்னோட்டம்
அதிகார துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இடமாற்றம் செய்யப்பட்ட பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர், பொறுப்பேற்கும் முன்பே பல்வேறு சலுகைகளை கோரியுள்ளது தற்போது சர்ச்சையை தூண்டியுள்ளது.
அதுமட்டுமின்றி அவரின் போலி சாதி சான்றிதழ் சமர்ப்பித்துள்ளார் என்றும், அதன் அடிப்படையிலேயே அவர் IAS தேர்வில் தேர்ச்சி பெற முடிந்தது எனவும் இந்தியா டுடே குறிப்பிடுகிறது.
பூஜா, ஓபிசி நான்-கிரீமி லேயர் அந்தஸ்திற்கு தகுதி படைத்தவர் என கூறி சான்றிதழ் சமர்பித்ததாக தெரிகிறது.
பூஜாவின் தந்தை 2024 லோக்சபா தேர்தலில் வஞ்சித் பகுஜன் ஆகாடியில் போட்டியிட்ட போது, அவரின் தேர்தல் பிரமாணப் பத்திரத்தின்படி, அவரது சொத்து மதிப்பு ரூ.40 கோடி என காட்டப்பட்டுள்ளது.
இது அவரது OBC தகுதி குறித்தும் கேள்விகளை தற்போது எழுப்பியுள்ளது
ஓபிசி
ஓபிசி கிடைக்கும் சலுகைகள் என்ன?
OBC யில் இருந்து, நான்- க்ரீமி (non-creamy) லேயரில் உள்ள விண்ணப்பதாரர்கள் அரசாங்க வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு பெற தகுதியுடையவர்கள்.
அரசு வேலைகளில் (ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்றவை) காலி இடங்களைப் பொறுத்து 27% இட ஒதுக்கீடு உண்டு.
அதேபோல, UPSC சிவில் சர்வீசஸ் தேர்வு போன்ற பல்வேறு பொதுத்தேர்வுகளுக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வுகளுக்கான முயற்சிகளின் எண்ணிக்கையில் தளர்வு உள்ளது. கட்-ஆஃப் மதிப்பெண்கள் தொடர்பாகவும் தளர்வு உள்ளது.
ஆனால், நான்-க்ரீமி லேயரில் உள்ள OBC யைச் சேர்ந்தவராக இருந்தால் மட்டுமே, வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு கிடைக்கும். கிரீமி லேயரின் கீழ் வந்தால், OBC இடஒதுக்கீட்டின் பலனை பெறமுடியாது.
வருமான வரம்பு
OBC நான்-கிரீமி லேயருக்கான வருமான வரம்பு என்ன?
உங்கள் பெற்றோர்கள் வகுப்பு 1 (குரூப் ஏ) அல்லது கிளாஸ் 2 (குரூப் பி) அதிகாரிகளாகவோ அல்லது அவர்கள் எந்த அரசியலமைப்பு பதவிகளையும் (ஜனாதிபதி, துணைத் தலைவர், ஆளுநர் போன்றவை) வகிக்கவில்லை என்றால், நீங்கள் OBC நான்-கிரீமி லேயர் கீழ் வர வாய்ப்புள்ளது.
உங்கள் பெற்றோர் அரசாங்கத்தில் வேலை செய்யவில்லை என்றால், அவர்களின் வருமானம், அரசாங்கத்தால் குறிப்பிடப்பட்ட வரம்பிற்குள் இருக்க வேண்டும்.
OBC களின் நான்- கிரீமி தகுதி பெற, விண்ணப்பதாரரின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. ரூ.8 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
பூஜாவின் விஷயத்தில், அவரின் தந்தையின் வருமானம் அதை தாண்டி இருப்பதாக கூறப்படுவதே தற்போது சர்ச்சையை தூண்டியுள்ளது.