
கர்நாடகாவில் ரோட்டில் இறங்கி பொது மக்களை சந்தித்த பிரதமர் மோடி
செய்தி முன்னோட்டம்
இன்று(பிப் 27) கர்நாடகாவில் உள்ள சிவமொக்கா மாவட்டத்திற்கு விமான நிலையத்தை திறந்து வைக்க சென்ற பிரதமர் மோடி, ரோட்டில் இறங்கி பொது மக்களை சந்தித்தார்.
அவர் செல்லும் வழியெல்லாம் பூக்களை தூவி தொண்டர்கள் வரவேற்றனர்.
கர்நாடகாவில் 2023ஆம் ஆண்டு மே மாததிற்குள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், இந்த வருடம் 5வது முறையாக பிரதமர் மோடி கர்நாடகாவிற்கு சென்றுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களில் கர்நாடகாவில் பிரதமர் கலந்துகொண்ட விழாக்கள்:
ஹுப்பள்ளி இளைஞர் திருவிழா, நாராயண்பூர் இடதுகரை கால்வாய் அர்ப்பணிப்பு, பழங்குடியினருக்கு ஹக்கு பத்ரா விநியோகம், ஹிந்துஸ்தான் ஹெலிகாப்டர் உற்பத்தி நிலையம் திறப்புவிழா, இந்திய ஏரோ ஷோ விழா ஆகியவையாகும்.
ட்விட்டர் அஞ்சல்
பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு அளித்த கர்நாடகா மக்கள்
#WATCH | Prime Minister Narendra Modi holds a roadshow in Belagavi, Karnataka. pic.twitter.com/NkkTJM4ugp
— ANI (@ANI) February 27, 2023