Page Loader
சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி தமிழகம் வருகிறார் ஜனாதிபதி
ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி தமிழகம் வருகிறார் ஜனாதிபதி

சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி தமிழகம் வருகிறார் ஜனாதிபதி

எழுதியவர் Venkatalakshmi V
Jul 25, 2023
08:50 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் பழம்பெரும் பல்கலைக்கழங்களில் ஒன்றான சென்னை பல்கலைக்கழத்தின் 165-வது பட்டமளிப்பு விழா, ஆகஸ்டு 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு தலைமையேற்க இந்தியா ஜனாதிபதி திரௌபதி முர்முவிற்கு அழைப்பு விடப்பட்டது. தற்போது, ஜனாதிபதி அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, அடுத்த மாதம், சென்னைக்கு முதல்முறையாக ஜனாதிபதி வருகைதரவுள்ளார். அவர் பதவியேற்றபிறகு, தமிழ்நாட்டிற்கு வருவது இதுவே முதல்முறை. இந்த விழாவில், விழாவில் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு கவர்னருமான ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, பல்கலைக்கழக துணை வேந்தர் கவுரி உள்பட பலர் கலந்துகொள்ள இருக்கின்றனர். ஏற்கனவே, கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவிற்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைப்பு விடுத்தும், ஜனாதிபதி வருகைதரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

தமிழகம் வருகிறார் ஜனாதிபதி