அமிர்தசரஸ் பொற்கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
செய்தி முன்னோட்டம்
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று(மார் 9) அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் தரிசனம் செய்தார்.
குடியரசு தலைவரின் ஒரு நாள் பயணத்தையொட்டி நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி தலைவர் ஹர்ஜிந்தர் சிங் தாமி ஆகியோருடன் கோவிலில் வழிபாடு செய்த குடியரசு தலைவர், 'கீர்த்தனை'யிலும் கலந்து கொண்டார்.
இன்று மதியம் விமான நிலையம் வந்தடைந்த அவரை, பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் மான், மத்திய அமைச்சர் சோம் பிரகாஷ், அமிர்தசரஸ் காங்கிரஸ் எம்பி குர்ஜீத் சிங் அவுஜ்லா, மாநில தலைமைச் செயலாளர், காவல்துறை இயக்குநர் ஜெனரல், அமிர்தசரஸ் காவல்துறை கமிஷனர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலை பார்வையிட்டார்
#WATCH | President Droupadi Murmu visits Golden Temple in Amritsar pic.twitter.com/B1QKpOBweo
— ANI (@ANI) March 9, 2023