Page Loader
இன்று கோலாகலமாக தொடங்கியது பூரி ரத யாத்திரை: குடியரசு தலைவரும் பங்கேற்க உள்ளார்

இன்று கோலாகலமாக தொடங்கியது பூரி ரத யாத்திரை: குடியரசு தலைவரும் பங்கேற்க உள்ளார்

எழுதியவர் Sindhuja SM
Jul 07, 2024
09:21 am

செய்தி முன்னோட்டம்

ஒடிசா: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று பூரி ரத யாத்திரை கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள உள்ளார். இந்து கடவுளான ஜெகந்நாதருக்கு ஆண்டு தோறும் நடத்தப்படும் ரத யாத்திரை லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் ஒரு மாபெரும் நிகழ்வாகும். இந்த வருடம் இதற்கான விழாக்கள் ஜூலை 7 ஆம் தேதி தொடங்கி ஜூலை 8 ஆம் தேதி வரை நடைபெறும். மிக அரிதாக இந்த ஆண்டு பூரி ரத யாத்திரை இரண்டு நாட்கள் நடக்க உள்ளது. கடைசியாக 1971 இல் பூரி ரத யாத்திரை இரண்டு நாட்கள் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா 

180 படைப்பிரிவுகள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளன

எனவே, 53 ஆண்டுகளுக்கு பிறகு பூரி ரத யாத்திரை இரண்டு நாட்கள் நடக்க உள்ளது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். எனவே, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு அவருக்காக சில சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. சட்டம் ஒழுங்கை பராமரிக்க, மாநில மற்றும் மத்திய அரசுகளில் இருந்து 180 படைப்பிரிவுகள்(ஒரு படைப்பிரிவில் 30 பணியாளர்கள் உள்ளனர்) பாதுகாப்புப் படையினர் ஆகியோர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். ஒடிசா கவர்னர், முதல்வர், மத்திய அமைச்சர்கள் மற்றும் பிற உயரதிகாரிகளுக்கு விஐபி மண்டலம் நிறுவப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் குடியரசுத் தலைவருக்கு ஒரு பாதுகாப்பு மண்டலம் ஒதுக்கப்பட்டுள்ளது.