பிரயாக்ராஜ் பள்ளியில், புதிய மற்றும் பழைய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குள் நடைபெற்ற நாற்காலி சண்டை
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் நாற்காலிக்காக இருவர் அடித்துக்கொண்டு சம்பவத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு மக்கள் தங்கள் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். பிரயாக்ராஜில் உள்ள பிரபல பிஷப் ஜான்சன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
என்ன நடந்தது?
நீதி போதிக்கும் பள்ளி தலைமையாசிரியரே பதவிக்காக நாற்காலி சண்டை போட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்தப் பள்ளி கிறிஸ்தவ மதத்தினரால் நடத்தப்படும் பள்ளியாகும். இப்பள்ளியில், செவ்வாயன்று, மோரிஸ் எட்கர் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து தலைமையாசிரியர் அறைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து, தானாகவே புதிய தலைமையாசிரியராக பொறுப்பேற்றார். அதன் பின்னர் அவரது ஆதரவாளர்கள் தற்போதைய தலைமையாசிரியரை அறையிலிருந்து வெளியேற்ற முயற்சிக்கும் போது தான் இருந்து கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் கல்னல்கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.