
'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனம் நீண்ட காலமாக பணம் செலுத்தவில்லை: பிராட் & விட்னி குற்றச்சாட்டு
செய்தி முன்னோட்டம்
இந்திய விமான சேவை நிறுவனமான 'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனம் நீண்ட காலமாக தங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை செலுத்தவில்லை என்று அமெரிக்க விமான இயந்திர உற்பத்தியாளர் பிராட் & விட்னி(P&W) குற்றம்சாட்டியுள்ளது.
'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனம் தனது நிதி நெருக்கடிக்கு இயந்திர உற்பத்தியாளர் பிராட் & விட்னி தான் காரணம் என்று நேற்று கூறி இருந்ததை அடுத்து, பிராட் & விட்னி 'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனத்தை குற்றம்சாட்டியுள்ளது.
கடுமையான நிதி நெருக்கடி காரணமாக, 'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனம் தனது விமான சேவையை திவால் செய்வதற்கு தானாக முன்வந்து டெல்லியில் உள்ள தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் நேற்று மனு தாக்கல் செய்தது.
details
வாடிக்கையாளர்களின் வெற்றியை முன்னிறுத்தி செயல்பட்டு வருகிறோம்: பிராட் & விட்னி
"பிராட் & விட்னி தனது விமான வாடிக்கையாளர்களின் வெற்றியை முன்னிறுத்தி செயல்பட்டு வருகிறது. மேலும் வாடிக்கையாளர்களின் டெலிவரி அட்டவணைக்கு நாங்கள் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறோம். கோ ஃபர்ஸ்ட் குறித்து மார்ச் 2023இல் நடுவர் அளித்த தீர்ப்புக்கு P&W இணங்குகிறது." என்று P&Wஇன் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
"ப்ராட் & விட்னி இன்ஜின்களை வழங்காததால், 'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனம் நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. இதனால், 'கோ ஃபர்ஸ்ட்' சேவைகளிடம் இருக்கும் பாதி விமானங்கள், அதாவது, 28 விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன." என்று கோ ஃபர்ஸ்ட் தலைமை நிர்வாகி கௌசிக் கோனா நேற்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.