'நான் முதல் ரேங்க் எடுக்காமல் இருந்திருக்கலாம்': இணையத்தில் உருவ கேலி செய்யப்பட்டதால் மாணவி வருத்தம்
செய்தி முன்னோட்டம்
உத்தரபிரதேசம்: 98.50 சதவீத மதிப்பெண்களுடன் UP போர்டு 10 ஆம் வகுப்பில் முதலிடம் பெற்ற பிராச்சி நிகாம், தனது முகத்தில்அதிக முடி இருப்பதால் ஆன்லைன் ட்ரோலிங்கை எதிர்கொண்டார்.
இந்நிலையில், தான் தேர்வில் முதலிடம் பெறாமல் இருந்திருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.
பிபிசி நியூஸ் ஹிந்திக்கு பேட்டியளித்த போது பிராச்சி நிகாம் இது குறித்து பேசி இருக்கிறார்.
தனது சாதனையை விட்டுவிட்டு, இணையவாசிகள் தனது தோற்றத்தை சமூக வலைதளங்களில் டிரெண்டிங் செய்கிறார்கள் என்று அவர் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.
"தேர்வில் கொஞ்சம் குறைவாக நான் மதிப்பெண் எடுத்திருந்தால் சமூக ஊடகங்களில் அது பிரபலமாக்கியிருக்காது. மேலும் எனது முகத்தில் இருக்கும் முடிக்காக இதுபோன்ற ட்ரோல்களை நான் சந்தித்திருக்க மாட்டேன்" என்று பிராச்சி கூறியுள்ளார்.
உத்தர பிரதேசம்
"அது வெளிப்படையாக என்னை மோசமாக உணர செய்கிறது"
"...எனினும், ஒரு சிலர் எனக்கு ஆதரவு தெரிவித்து, ஹார்மோன் மாற்றங்களால் தான் பெண்களுக்கு முகத்தில் முடிகள் முளைக்கின்றன என்று கூறி அந்த ட்ரோல்களை தடுக்க முயற்சிக்கின்றனர்" என்று அவர் கூறியுள்ளார்.
தனது தோற்றத்தினால், நிஜ வாழ்க்கையில் ஏற்படும் துன்புறுத்தல் குறித்து மனம் திறந்து பேசிய பிராச்சி, "அது வெளிப்படையாக என்னை மோசமாக உணர செய்கிறது. ஆனால் மக்கள் அவர்கள் நினைப்பதை(சமூக ஊடகங்களில்) எழுதுகிறார்கள். அதற்கு என்னால் எதுவும் செய்ய முடியாது" என்று கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் பொறியியலாளராக விரும்புவதாகவும், தனது கனவுகளில் கவனம் செலுத்த உள்ளதாகவும் பிராச்சி மேலும் கூறியுள்ளார்.