Page Loader
உங்கள் ஏரியாவில் நாளை (மே 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தில் நாளை (மே 23) மின்தடை ஏற்படும் பகுதிகள்

உங்கள் ஏரியாவில் நாளை (மே 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
May 22, 2025
11:50 am

செய்தி முன்னோட்டம்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (மே 23) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- திருவாரூர்: பவித்திர மாணிக்கம், தண்டலை. கோவை தெற்கு: கிருஷ்ணா புரம், செம்மாண்டம் பாளையம், கணியூர் ஒரு பகுதி, சோமனூர் ஒரு பகுதி.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவை மெட்ரோ: கல்லா பட்டி, சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா, வள்ளியம் பாளையம், கே.ஆர். பாளையம், விளாங் குறிச்சி, தண்ணீர் பந்தல், பீளமேடு தொழிற் பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர், லட்சுமி நகர், முருகன் நகர், குமுதம் நகர், ஜீவா நகர், செங்காளியப்பன் நகர். ஈரோடு: பாரதியார் நகர், வீரப்பம் பாளையம் பை பாஸ், ஐஸ்வர்யா கார்டன், சுப்பிரமணியன் நகர், வெட்டுக்காட்டு வலசு, ஈகிள் கார்டன், கருவேல்பாறை வலசு, ஆட்டுக்கம் பாறை, சூளை, அன்னை சத்தியா நகர், முதலிதோடம்.