
உங்கள் ஏரியாவில் நாளை (மே 13) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (மே 13) தமிழகத்தில் பல இடங்களில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
திண்டுக்கல்: பட்டிவீரன் பட்டி, காந்தி புரம், எம்.வாடிப் பட்டி, அய்யம் பாளையம், தேவரப்பன் பட்டி, சித்தேரவு, பெரும்பாறை, சித்தரேவு, கத்திரிநாயக்கன் பட்டி.
மின்தடை
தமிழகத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகள்
திருவாரூர்: கொரடாச்சேரி டவுன், கிளாரியம், கமுகக்குடி, பெருமாள் கரம், மூல மங்கலம், ஆண்டிப்பந்தல், குவாலிக்கல், காக்ககோட்டூர், மல்லியங்கரை, பேட்டை, பெருங்குடி, மருவத்தூர், பவித்திர மாணிக்கம், விளமல், ஆலிவலம், காரக் கோட்டை, எடகெலையூர், மேலவாசல், பேரளம், கோவிந்தச்சேரி, பொரசக்குடி, சக்கர கொத்தங்குடி, அத்திச்ச புரம், நெம்மேலி, புள்ளவராயன் குடிகாடு, எழிலூர், மருதவனம், எடை வங்கநகர்.