Page Loader
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 31) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தில் நாளை (ஜனவரி 31) மின்தடை ஏற்படும் பகுதிகள்

உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 31) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Jan 30, 2025
03:59 pm

செய்தி முன்னோட்டம்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (ஜனவரி 31) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- மதுரை: மாணிக்கம்பட்டி அலங்காநல்லூர் சுற்றுப்புறம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி-பிற்பகல் 2 மணி வரை மின்தடை அமலில் இருக்கும். நாகப்பட்டினம்: கோடியக்கரை பகுதியில் காலை 9 மணி-பிற்பகல் 2 மணி வரை மின்தடை அமலில் இருக்கும் தூத்துக்குடி: மணப்பாடு, குலசை.ஆலந்தலை ஆகிய பகுதிகளில் காலை 10 மணி-பிற்பகல் 2 மணி வரை மின்தடை அமலில் இருக்கும்

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

சென்னை தெற்கு I: முழு ராம் நகர் தெற்கு, வடக்கு, முழு குபேரன் நகர் விரிவாக்கம், முழு எல்ஐசி நகர், முழு ஷீலா நகர், முழு ராமலிங்கம் நகர்/சிவப்பிரகாசம் நகர், முழு பிருந்தாவன் நகர், முழு சதாசிவம் நகர், முழு மகாலட்சுமி நகர்களில் 9-2 வரை மின்தடை அமலில் இருக்கும். சென்னை தெற்கு II: முழு அனகாபுத்தூர், முழு பம்மல், முழு பொழிச்சலூர் பகுதிகளில் 9-4 வரை மின்தடை அமலில் இருக்கும். சென்னை மேற்கு: அண்ணாநகர் சி, எப், எச் பிளாக், டி.பி.சத்திரம், ஆர்.வி.நகர், சாந்தி காலனி, அண்ணாநகர் வடக்கு பகுதிகளில் 9-2 வரை மின்தடை அமலில் இருக்கும்.