உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (டிசம்பர் 28) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 110/11 கேவி அதிராம்பட்டினம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட அதிராம்பட்டினம் மற்றும் ராஜமடம் பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அமலில் இருக்கும்.
மின்வேலியில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு
தமிழ்நாடு மின்சார வாரியம் தொடர்பான மற்றொரு தகவலில், மின்வேலியில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரம் பகுதியைச் சேர்ந்த முருகவள்ளி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், 2022இல் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தனது கணவர் உயிரிழந்ததற்கு இழப்பீடு கோரி மனுதாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், தமிழ்நாடு மின்சார வாரியம், ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கலாம் என்றும், அந்த தொகையை அனுமதியின்றி மின்வேலி அமைத்திருந்த ஜேம்ஸ் என்பவரிடம் இருந்து சட்டப்படி வசூலித்துக் கொள்ளலாம் என தீர்ப்பளித்துள்ளது.